விவோ நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஐக்கூ பல்வேறு புதிய ரக ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஐக்கூவின் முதல் வெளியீடாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளியாக இருக்கிறது iQOO Neo 7.
அதன் சிறப்பம்சங்களாவன
-
மீடியாடெக் டைமென்சிட்டி 8200 ப்ராசசர், அமோலெட் டிஸ்ப்ளே
-
6.78 இன்ச் (17.22 செ.மீ) ஸ்க்ரீன் சைஸ், 1080X2400 ரெசல்யூசன்
-
8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னெல் மெமரி
-
16 எம்.பி முன்பக்க கேமரா, 50 எம்பி வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா
-
பெசல் லெஸ் டிஸ்ப்ளே வித் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே
-
டூயல் சிம், 5ஜி சப்போர்ட்டட், வைஃபை, ப்ளூடூத்,
-
5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, யூஎஸ்பி டைப் –சி சார்ஜிங் மற்றும் மாஸ் ஸ்டோரேஜ்
பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. iQOO தளத்தில் நடைபெறும் போட்டியில் வென்றால் இந்த ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.