உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம் வாட்ஸ் ஆப். மெட்டா நிறுவனம் இதை நிர்வகித்து வருகிறது.
டெலகிராமில் உள்ள வசதியைப் போன்று 1 ஜிபிக்கும் அதிகமான பைல்ஸ்கள் அனுப்பும் வசதி ,குரூப் கால்கள், குழு அமைப்பு முறைகள் அனைத்தும் இதில் உள்ளது.
ஃபேஸ்புக்கில் உள்ளதைப் போன்று விரைவில், கவர் போட்டோ வைக்கும் வசதியும் வாட்ஸ் ஆப்பில் வரவுள்ளது.
அதேசமயம், வாய்ஸ் நோட்ஸ் குறிப்புகளை ஸ்டேட்டஸாக அப்டேட்டாக பகிரும் திறனை வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு தரவுள்ளது.
இதன் மூலம் தற்போது போட்டோகள், வீடியோக்கள், எழுத்துகளை பதிவிடுவதைப் போன்று விரைவில் பயனர்கள் அவரவர் குரல்களையும் இனி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பகிரலாம்.