Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BARD vs Chat GPT! ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (10:57 IST)
மைக்ரோசாஃப்ட்டின் ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவை வெளியிட்டதன் தொடர்ச்சியாக தற்போது கூகிள் தனது BARD AI ஐ வெளியிட்டு போட்டியை உருவாக்கியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தில் உலகம் வேகமாக நகர்ந்து கொண்டுள்ள நிலையில் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI டெக்னாலஜி. அனைத்து விதமான தகவல்களையும் தரும், ஒரு தொடர் உரையாடலை புரிந்து கொண்டு செயல்படும் செயற்கை நுண்ணறிவான Chat GPT ஐ OpenAI நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிட்டது.

Chat GPT க்கு போட்டியாக வந்த BARD!



அதுமுதல் உலகம் முழுவதும் AI க்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. கணித சமன்பாடுகள், கணினி கோடிங், கதை, திரைக்கதை என சாட் ஜிபிடி எழுதி கொடுக்காத விஷயங்களே இல்லை. இந்த Chat GPT க்கு போட்டியாகதான் கூகிள் தனது BARD ஐ களமிறக்கியுள்ளது. முதலில் வெளியிடப்பட்டு பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நேற்று 130+ நாடுகளில் 3 மொழிகளில் BARD தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

BARD என்றால் என்ன?

BARD என்பது Better Accessible and Responsible Development என சொல்லப்படுகிறது. ஆனால் சாட் ஜிபிடிக்கும் பார்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளது. BARD இப்போதைக்கு கூகிள் அஸிஸ்டெண்டின் ஒரு மேம்பட்ட வடிவம் போல செயல்படுகிறது.

உதாரணத்திற்கு முன்பு ஏதாவது ஒரு தகவல் தேவை என்றால் கூகிளில் தேடுவோம். அது அந்த தகவல் சம்பந்தமான சில இணைய லிங்குகளை காட்டும். இதுவே BARDல் தேடினால் அது இணைய தள தகவல்களை தொகுத்து சுருக்கி நமக்கு புரியும் விதத்தில் சொல்லிவிடும். சின்ன கேள்விக்கு கூட தெளிவான பதிலை தருகிறது. கூடவே அதற்கும் மேற்பட்ட தகவல்கள் தேவைப்பட்டால் எந்தெந்த தளங்களில் அதை படிக்கலாம் என்பதையும் காட்டுகிறது.

இதுமட்டுமல்லாமல் சாட் ஜிபிடி போன்றே கதை, திரைக்கதை, கணினி கோடிங் உள்ளிட்டவற்றையும் எழுதுகிறது.

BARD vs Chat GPT எது சிறந்தது?

BARD செயற்கை நுண்ணறிவானது LaMDA (Language Model for Dialogue Application) முறையில் இயங்குகிறது. மேலும் கூகிளின் PaLM 2 (Pathways Language Model) ல் இயங்குவதற்கான செயல்பாடுகளும் நடந்து வருகிறது.. ஆனால் இன்னமும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பார்ட் வரவில்லை. அது தகவல்களை கிரகிக்கும் நிலையிலேயே உள்ளது. அதன் மூலம் பயனாளர்களை தேவையை அது அறிந்து கொள்ள அதற்கு காலம் எடுக்கும். சாட் ஜிபிடியாலேயே இன்னமும் மற்ற மொழிகளை சரளமாக பேச முடியவில்லை.




தற்போதைய ஒப்புமை வகையில் சாட் ஜிபிடி பார்ட்-ஐ விட அனைத்து கேள்விகளுக்கும் ஏற்ற பதில் ஒன்றையாவது அளித்து விடுகிறது. ஆனால் பார்ட் சில கேள்விகளுக்கு சரியான பதில்களை அளிக்க முடியாமல் உள்ளது.

உதாரணத்திற்கு ஏதாவது ஒரு புத்தகம் குறித்து அல்லது புத்தகத்தின் உள்ளடக்கத்திலிருந்து கேள்விகள் கேட்டாலும் சாட் ஜிபிடி பதில் சொல்கிறது. ஆனால் பார்ட்-ஆல் இத்தகைய கேள்விகளை புரிந்து பதிலளிக்க முடியவில்லை. இருப்பினும் நாளடைவில் இதன் தொழில்நுட்பம் விரிவுப்படுத்தப்பட்டு வருவதால் சாட் ஜிபிடிக்கு நிகரான செயல்திறனை பார்ட்-உம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாட் ஜிபிடி தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு 2021 மற்றும் அதற்கு முந்தைய அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து பதில் சொல்கிறது. அதனால் அதில் ஒரு துல்லியம் உள்ளது. பார்ட் கூகிள் தேடுபொறியின் தகவல்களின் அடிப்படையில் பதில் அளிப்பதால் அதில் துல்லியம் சற்று குறைவே. ஆனால் பார்ட்-ல் நேற்று நடந்த சம்பவம் குறித்துக் கூட கேட்க முடியும். ஆனால் சாட் ஜிபிடியில் முடியாது.

சாட் ஜிபிடியை பயன்படுத்தி பலர் கட்டுரைகளை எழுதிக் கொள்வதால் அதை கண்டறிய ஓபன் ஏஐ AI Text Classifier ஐ வைத்துள்ளது. இதன் மூலம் அது மெஷின் எழுதியதா? மனிதர்கள் எழுதியதா? என கண்டறியலாம். இந்த வசதிகள் பார்டில் அறிமுகம் செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments