Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் பில்டப் கொடுத்த ஆப்பிள்; பல்பு வாங்கிய ஐபோன் X (வீடியோ)

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (12:51 IST)
ஐபோன் X ஸ்மார்ட்போனில் மிக முக்கிய சிறப்பம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி அன்லாக் முறை பாதுகாப்பானதல்ல என ஆய்வில் தெரியவந்துள்ளது.


 

 
ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐபோன் X மாடல் ஸ்மார்ட்போன் பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. அதில் ஃபேஸ் ஐடி அன்லாக் முறை மிக முக்கியமான ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது போன்று பாதுகாப்பானது இல்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வியட்நாமை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான காவ் 150 டாலர்கள் செலவில் முகமூடி ஒன்றை உருவாக்கி ஆப்பிள் ஃபேஸ் ஐடி பாதுகாப்பானது இல்லை என உறுதி செய்துள்ளனர். 3D பிரிண்டிங், மேக்கப் மற்றும் 2D படங்களை ஒன்றிணைத்து முகமூடி உருவாக்கப்பட்டது.
 
முகத்தில் உள்ள கன்னம் மற்றும் மூக்கு பிரேத்யேமாகவும் கச்சிதமாகவும் உருவாக்கப்பட்டதாக காவ் சைபர் செக்யூரிட்டி துணைத் தலைவர் கோ டுவான் தெரிவித்தார். இதன்மூலம் அவர்கள் ஐபோனை ஏமாற்றி அன்லாக் செய்துள்ளனர். மேலும் ஆப்பிளின் ஃபேஸ் ஐடி பாதுகாப்பானது இல்லை என்பதை தெளிவாக விளக்கும் வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளனர்.
 
இந்த வீடியோ ஆப்பிளின் புதிய தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு தன்மைக்கு சவால் விடுத்துள்ளது.   
 

நன்றி: Bkav Corp

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments