Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.1,999-க்கு ஐபோன்; 70% பைபேக் சலுகை: ஜியோ அசத்தல்!!

Advertiesment
ரூ.1,999-க்கு ஐபோன்; 70% பைபேக் சலுகை: ஜியோ அசத்தல்!!
, திங்கள், 30 அக்டோபர் 2017 (10:51 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பதிப்பான ஐபோன் X வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ 70% பைபேக் சலுகையை வழங்குகிறது.


 
 
ரிலையன்ஸ் ரீடெயில், ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம், மை ஜியோ செயலி, அமேசான் வலைத்தளங்களில் ரூ.1,999 மட்டுமே  செலுத்தி புதிய ஐபோன் X முன்பதிவு செய்யலாம்.
 
இந்த சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும்.
 
இந்த சலுகையை பயன்படுத்தி ஐபோன் X வாங்கி 12 மாதங்களில் திரும்ப வழங்கும் போது 70% பைபேக் ஆஃபரையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜியோ பைபேக் சலுகை விவரங்கள்: 
 
# மாதம் குறைந்தபட்சம் ரூ.799 மற்றும் அதற்கும் அதிக விலையில் ஜியோ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.
 
# பைபேக் சலுகை ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சாதனங்களுக்கும் பொருந்தும்.  
 
# ஐபோன் X வாங்கிய பின்னர் மை ஜியோ செயலியை டவுன்லோடு செய்து பைபேக் சலுகைக்கு பதிவு செய்ய வேண்டும். 
 
# ஆப்பிள் சார்பில் பைபேக் சலுகையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கப்பட்ட ஐபோன்களின் IMEI எண் கொண்டு உறுதி செய்யப்படும். 
 
# ஜியோ ரூ.799 திட்டத்தில் தினமும் 3 ஜிபி அளவு 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறைக்கு வெளியே தங்கியிருந்த சசிகலா - ரூபா அதிர்ச்சி தகவல்