Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி கேப்டன்சிக்கு 4 மதிப்பெண்தான் கொடுப்பேன்… முன்னணி வீரரின் ஆதங்கம்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:46 IST)
நேற்றைய போட்டியில் தோனியின் கேப்டன்சிக்கு 4 மார்க்தான் கொடுப்பேன் என சேவாக் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தோனியின் கடைசி நேர மந்தமான ஆட்டம்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோனியைப் பற்றி சேவாக் கடுமையான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘தோனி இலக்கை எட்ட முயற்சியே செய்யவில்லை. தோனி முன்னாலேயே இறங்கி இருக்க வேண்டும் அல்லது ஜடேஜாவையாவது இறக்க வேண்டும். தோனி அடிக்த மூன்று சிக்ஸர்கள் அடித்தது பெரிய விஷயமாக தோன்றும். ஆனால் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்த போவதில்லை. நேற்றைய போட்டியில் தோனியின் கேப்டன்சிக்கு நான் 10-க்கு 4 மதிப்பெண் தான் கொடுப்பேன்.’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments