Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேதார் ஜாதவ் இல்லைன்னாலும் தோற்குதே: சிஎஸ்கே ரசிகர்கள் புலம்பல்

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (07:42 IST)
கடந்த 7ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடியபோது கேதர் ஜாதவ்வின்ன் மோசமான ஆட்டம் காரணமாகத்தான் சென்னை அணி தோல்வி அடைந்தது என சமூக வலைதளங்களில் பலர் பொங்கினார்கள். இதனால் நேற்றைய போட்டியில் கேதார் ஜாதவ் அணியில் இல்லை. கேதாருக்கு பதிலாக ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்படியிருந்தும் சென்னை அணி நேற்றைய போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது
 
பெங்களூர் அணி நேற்று 170 என்ற இலக்கை சென்னை அணிக்கு கொடுத்தது. ஆனால் சென்னை அணி இலக்கை எட்டுவதற்கு எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. வாட்சன் மற்றும் டு பிளசிஸ் ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அம்பத்தி ராயுடு 40 பந்துகளில் 42 ரன்களும் ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்களும் அடித்து அவுட் ஆகினர் 
 
அதன் பின்னர் விளையாடிய தோனி,, ஜடேஜா, பிராவோ, சாம் கர்ரன் ஆகிய பேட்ஸ்மேன்கள் இலக்கை எட்டும் நோக்கமே இல்லாமல் விளையாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கேதார் ஜாதவ் இல்லை என்றால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்று கூறிய சமூகவலைதள பயனாளிகளுக்கு நேற்றைய போட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் சென்னை அணியின் பெர்பாமன்ஸ் சரி இல்லை என்பதே நேற்றைய போட்டியின் முடிவு காட்டுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்… தோல்விக்குப் பின் ரோஹித் ஷர்மா வருத்தம்!

ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. இந்தியா தோல்வி..!

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

அடுத்த கட்டுரையில்
Show comments