ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் அபுதாபியில் மலை 3:30 மணிக்கு கே.எஸ்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியுடன், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி மோதி வருகின்றன.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 159 ரன்கள் எடுத்து, 160 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்த இருஅணிகளும் இதுவரை 25 முறை நேரில் மோதியுள்ளன. கொல்கத்தா அணி 17 முறையும் பஞ்சாப் அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.