Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரச்சாரமான பச்சை மொச்சை காரம் செய்வது எப்படி?

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (10:19 IST)
பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களில் மொச்சைக் கொட்டையும் ஒன்று. மொச்சையை வைத்து சூப்பரான சுவையான பல உணவுகள் செய்யலாம். சுவையான பச்சை மொச்சை காரம் செய்வது எப்படி என பார்ப்போம்.


  • தேவையானவை: பச்சை மொச்சை, கடுகு, வெங்காயம், உளுந்து, பச்சை மிளகாய், மிளகு, சீரக பொடி, சோம்பு பொடி, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு
  • பச்சை மொச்சையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு பச்சை மொச்சை, உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.
  • மொச்சை நன்றாக வெந்த பிறகு தண்ணீரை வடித்து விட்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக தாளிக்கவும்.
  • பிறகு அதில் வேகவைத்த மொச்சையை சேர்த்து மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • இப்போது காரசாரமான சுவையான பச்சை மொச்சை காரம் தயார். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்தது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

அடுத்த கட்டுரையில்
Show comments