Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயதசமி நன்னாளில் எந்தெந்த புது காரியங்களை தொடங்கலாம்...?

Bharatanatyam
, செவ்வாய், 4 அக்டோபர் 2022 (14:35 IST)
நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். இதற்கு சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு.


கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்ற இசைக் கருவிகளை கற்க ஆரம்பித்தல் நலம்.

முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் ஸ்ரேஷ்டம்.

குழந்தைகள் நன்கு படிக்க சரஸ்வதி மந்திரம்:

“சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யராம்பம் கரிஷ்யாமி: சித்திர் பவது மே ஸதா!!”

சரஸ்வதி தேவியே! வேண்டிய வரங்களைத் தருபவளே! உனக்கு நமஸ்காரம்! இப்போது நான் கல்வி, கலைகளை படிக்கத் துவங்குகி றேன். எனக்கு எப்போதும் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

கொலு முடிந்து 10ஆம் கடைசி நாள் மாலை நேரம் மஹா மங்கள ஆரத்தி எடுத்து எல்லா ஸ்வாமி விக்ரஹம் மற்றும் பொம்மைகளையும் கண்ணில் ஒத்திக் கொண்டு அதற்குறிய பெட்டிகளில் வைக்கவும்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் சொல்லும் காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன தெரியுமா...?