Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம், யாகசாலை பூஜை..!

Mahendran
வியாழன், 30 ஜனவரி 2025 (18:22 IST)
கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், 108 வைணவத் தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம்  நடைபெற உள்ளது.
 
 வரும் பிப்ரவரி 2ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருவிழா சிறப்பாக நடத்தப்படும் வகையில் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.
 
பிப்ரவரி 2ஆம் தேதி கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முன்பாக, காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தனர். தொடர்ந்து, திருப்பதி, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 75 பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை ஆரம்பித்தனர்.
 
இதனை தொடர்ந்து, அங்குரார்ப்பணம், வேத திவ்ய பிரபந்த பாராயணம் மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே. குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர். துரைராஜ், இயக்குநர் கோமதி துரைராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
 
இந்த விழா சிறப்பாக நடைபெற கோவில் நிர்வாகத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நேரத்தில் உதவி வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (08.02.2025)!

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.02.2025)!

தைப்பூச திருநாள் எதனால் கொண்டாடப்படுகிறது. புராணம் சொல்வது என்ன?

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

அடுத்த கட்டுரையில்
Show comments