வெள்ளியங்கிரி மலை ஏற பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதி என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி கோவில் உள்ளது என்பதும் தெற்கு கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வரும் இந்த மலை கோயிலுக்கு ஏராளமானோர் வருகை வருவார்கள் என்பது தெரிந்தது.
ஏழு மலைகளை கடந்து அங்கு இருக்கும் சுயம்பு வடிவிலான சிவனை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம். அந்த வகையில் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
அந்த வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறலாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் அது போன்ற பொருட்களுடன் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வெள்ளியங்கிரி மலையில் செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.