Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் சிறப்புகள்..!

Mahendran
வியாழன், 5 டிசம்பர் 2024 (18:33 IST)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள அருள்மிகு பரமகல்யாணி உடனுறை கோவிலுக்கு சென்றால் அனைத்து பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அம்பாசமுத்திரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்வார்குறிச்சியில் மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில்.

கடனையாறு என்று அழைக்கப்படும் கருணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது என்று இந்த ஊரில் உள்ள பொதுமக்கள் நம்புகின்றனர்.

எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேஸ்வரர் பரம கல்யாணி அம்மன் நான்கு கைகள் உடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நான்கு திசைகளில் இருந்தும் தரிசனம் செய்யக் கூடிய வகையில் எங்கு சுவாமி எழுந்தருளியிருப்பது தனி சிறப்பாகும்.

சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒரு பாகமும் பூமிக்கு கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீசைலம் அம்பாள் பிரமதாம்பிகை கோவிலின் சிறப்புகள்..!

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்! பக்தர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது! - காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகள்!

திருக்கார்த்திகை பிரதோஷம்; சதுரகிரி செல்ல அனுமதி தந்த வனத்துறை! - மகிழ்ச்சியில் பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணவரவு இருக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(08.12.2024)!

மகாதீப தரிசனத்திற்கு 2500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை: ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments