சமஸ்கிருத புலமை யாரிடம் உள்ளதோ அவர்கள் வியாசர் அம்சம் என்பார்கள்
மஹாபாரதம் என்ற மாபெரும் காவியத்தை வழங்கிய வியாசரின் இயற்பெயர் கிருஷ்ண துவைவ பாயணர். இவர் கலிகாலம் முடிவடையும் வரை வாழ்வார் என கூறப்படுகிறது. 18 புராணங்களையும் இவரே எழுதியதாகவும் கூறப்படுகிறது.
சமஸ்கிரத புலமை யாரிடம் உள்ளதோ, யார் ஒருவர் ராமர், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரை துதிக்கிறார்களோ அவர்கள் வியாசர் அம்சம் என கூறுவது உண்டு. இவருக்கான காயத்ரி மந்திரம் ஒன்று கூறப்படுகிறது.
அது, “ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தந்தோ வ்யாச ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் நாம் வியாசரின் மேன்மைகளை கற்றுக்கொள்ளமுடியும் என ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வியாசரை போன்ற ஞானமும் வளரும் எனவும் கூறப்படுகிறது.