Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணிந்தால் நல்லது...? பலன்கள் என்ன...?

ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணிந்தால் நல்லது...? பலன்கள் என்ன...?
ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.
முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர்  அணியலாம்.
 
ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற  மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.
 
ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.
 
ருத்ராட்சத்தை இதயத்திற்கு அருகில் அணிவதால் மிகப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இதய தொடர்பான கோளாறுகள், டென்ஷன்,  பதட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிலர் கைகளில் ருத்ராட்சத்தை  அணிந்திருப்பார்கள். பிரேஸ்லெட்டில் இணைத்து அணிவார்கள். அதையெல்லாம் விட, கழுத்தில் அணிவதுதான் சிறந்த நன்மைகளைத் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-01-2020)!