Publish Date: Mon, 04 Nov 2024 (18:21 IST)
Updated Date: Mon, 04 Nov 2024 (18:25 IST)
பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படுவது மனப்பிரச்சனை மற்றும் பணப்பிரச்சினை. இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று தான் அர்த்தம். அந்த வகையில், இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்ப்பது பழமுதிர்ச்சோலை முருகப்பெருமான் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலையில், முருகன் தேவியரோடு ஏகாந்தமாக இருக்கும் ஆறாவது படை வீடாகும். அவ்வைக்கு நெல்லிக்கனியையும் நக்கீரருக்கு வீடுபேறும் அளித்த இந்த இடம், முருகனின் மிகச் சிறந்த திருத்தலங்களில் ஒன்று.
இந்த கோவிலுக்கு சென்றால், மன பிரச்சனை மற்றும் பணப்பிரச்சினை ஆகிய இரண்டும் தீர்ந்துவிடும் என்றும், வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அழகர் மலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் மலையேறி சென்றால் பழமுதிர்சோலையை அடையலாம். வந்த வினை தீர, வரவிருக்கும் சோதனைகள் வராமல் இருக்க பழமுதிர்சோலை கந்தனை சரணடையுங்கள் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.