நாகை மாவட்டம் திருமருகல் வடகரை ஊராட்சியில் உள்ள உள்ளது திருப்பனையூர் கிராமம். இந்த கிராமத்தில் பழமையான பெரியநாயகி உடனுறை சுவாமி சௌந்தரேஸ்வர் ஆலயம் உள்ளது. சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற சிறப்பான தலமாகவும் கரிகாலச் சோழன் இளமைப் பருவத்தில் வழிபட்ட தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது.
இந்த கோயிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருப்பணிகள் முழுவதும் முடிந்து கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி கடந்த மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது அதைத் தொடர்ந்து பல பூஜைகளும் செய்யப்பட்டன..
இன்று காலை கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜைகளை செய்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். அதன் பின் விமான கோபுரங்களில் ஏறி கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாரணையும் காட்டப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குரு மகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பிரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்<>