இந்துக்கள் வணங்கும் முக்கிய கடவுளாக விநாயகர் இருக்கிறார். எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு விநாயகர் சிலை வைத்திருப்பார்கள்.. விநாயகனை வணங்கிவிட்டுதான் மற்ற தெய்வங்களை பக்தர்கள் வணங்குவார்கள். விநாயக கடவுள் தொடர்பான பல கதைகளை மக்கள் சிறுவயதிலிருந்து புத்தகங்களில் படிக்கிறார்கள்.பலருக்கும் பிடித்த இஷ்ட தெய்வமாக விநாயகர் இருக்கிறார்.
ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவில் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோவை புளியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம்
.
இங்கு விநாயகர் சிலை 190 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறார்.. 19 அடி உயரத்தில் விநாயகரை பார்க்கும்போது பக்தர்களுக்கு உடல் சிலிர்ப்பு ஏற்படும்.
திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், குழந்தை இல்லாமல் இருப்பவர்கள், தொழிலில் நஷ்டம் என பல பிரச்சனைகளை கொண்ட மக்கள் இந்த முந்தி விநாயகர் கோவிலுக்கு வந்து தங்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என மனமுருகி வேண்டுகிறார்கள். இந்த முந்தி விநாயகர் சிலையில் நெற்றி மட்டுமே இரண்டு அடி அகலம் கொண்டது. விநாயகரின் துதிக்கை வலம்சுழியாக அமைந்து அதன் நுனியில் அமிர்த கலசத்தை ஏந்தி இருப்பது போல சிலையை உருவாக்கியுள்ளனர். அது செல்வம் பெருகும் என்பதை உணர்த்துகிறது.
விநாயகர் சதுர்த்தி அப்போது 3 டன் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை விநாயகருக்கு அனுவிக்கப்படுகிறது. தினமும் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரை கோயில் திறந்திருக்கும். அதன்பின் நடை சாத்தப்பட்டு மீண்டும் 4:00 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.