Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி மந்திரம் ஜெபிப்பது எப்படி ??

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:49 IST)
காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை  சிருஷ்டித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டவள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். 

மந்திரம்:

ஓம் பூர்புவஸ் ஸுவ 
தத்ஸவிதுர் வரேண்யம் 
பர்கோதேவஸ்ய தீமஹி 
தியோயோன் ப்ரசோதயாத்

இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால்  பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்ரி  என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு.

இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம்  ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.

காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008  அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்கள்தான் பணக்காரர்கள்! தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பு!

2025 சனி பெயர்ச்சி! ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிகள் இதுதான்..! எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? | 2025 Sani Peyarchi

2025 New Year Horoscope: 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்கள் யார்? எப்போது வழிபட வேண்டும்?

ஐயப்ப விரதம் மேற்கொள்பவர்கள் அனுதினம் சொல்ல வேண்டிய மந்திரம்! Ayyappa Mandhiram

இந்த ராசிக்காரர்களுக்கு தானம், தர்மத்தால் நன்மை உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(26.11.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments