Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காயத்ரி மந்திரம் ஜெபிப்பதால் உண்டாகும் பலன்கள்.....!!

Advertiesment
காயத்ரி மந்திரம் ஜெபிப்பதால் உண்டாகும் பலன்கள்.....!!
உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்களில் சிறந்த காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஆத்ம சுத்தி  கிடைக்கும்.
 
சீதையில் “மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என கிருத்ண பகவான் கூறியுள்ளார். தன்னை ஜெபிக்கின்றவர்களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரம் என்ற பெயர் ஏற்பட்டது.

காயத்ரி மந்திரம்: 
 
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
 
விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவரது முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியதாம். ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்த போது “த்ரயி” என்ற வேதசாரம் கிடைத்தது. அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்த  போது காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது.
 
வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது. விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள். உலக நன்மையைக் கருத்தில் கொண்டு அவர் அதை நமக்கு வழங்கினார். விஸ்வாமித்திரரிடம் காயத்ரி மந்திர உபதேசம்  பெற்றதாகேயே ஸ்ரீராமபிரான் இராவணனை வென்றதாகவும் செல்லப்படுகிறது.
 
கய்த்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு. காப்பார்றும் எனப் பொருள்படும் அன்னை கயத்ரி தனது அபய கரங்கலால் நமது பயத்தைப் போக்கியருளவாள். நாடு சுபிட்சமடையவும் கொடிய நோய்கள் அகலவும் காயத்ரி மந்திரம் உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (24-12-2019)!