Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆத்துல தண்ணி இல்லைனாலும் நாங்க ஆடிப்பெருக்கை கொண்டாடுவோம்”. நீர் திறக்காத நிலையிலும் வழிபட்ட பக்தர்கள்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (13:12 IST)
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்காத நிலையிலும், பக்தர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடி வழிபட்டனர்.

கடந்த ஆடிப்பெருக்கில், மேடூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், காவிரியில் பக்தர்கள் அதிகமாக கூடினர்.

ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. காவிரியில் தண்ணீர் திறக்காததால், பக்தர்கள் குறைவாகவே வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துபோனது. அதிகாலையிலேயே கிராமப்புற பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் லாரிகளில் வந்த பக்தர்களை மாசிலாப்பாளையம், மூலக்காடு, ஆகிய நீர்பரப்பு பகுதிக்கு போலீஸார் திருப்பி விட்டனர்.

காவிரியில் நீர் திறந்துவிடாத நிலையிலும், ஆடிப்பெருக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் குவிந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

அடுத்த கட்டுரையில்
Show comments