Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் பெண்கள் வழிபாடு!

Advertiesment
ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் பெண்கள் வழிபாடு!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் பெண்கள் மற்றும் ஆண்கள் புதுமண தம்பதியினர் மற்றும் விவசாயிகள் காவிரி தாயை வழிபட்டனர்.
ஆடி பெருக்கு என்றாலே காவிரி பெருக்கு எடுப்பது தான் சிறப்பு. அதுவும் இந்த ஆண்டு ஆடி சனிக்கிழமை பெருக்குக்காக வந்துள்ளதால்  விஷேசமாக கொண்டாடி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணை அமைந்துள்ள பகுதியில் அருள்மிகு செல்லாண்டியம்மன்கோவில் உள்ளது. 
 
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று அதிகாலையிலேயே மாயனூர் காவிரி ஆற்றிற்கு வந்து குளித்துவிட்டு இந்த பருவத்தில் விளையும் பேரிக்காய், வாழைப்பழம், கொய்யாபழம், காதலகருகமணி போன்ற பொருட்களை வைத்தும், வாளாண் அரிசி, எள், வெல்லம்  கலந்து காவிரி தாய்க்கு படையிலிட்டு காவிரி தாயை வணங்கினர். இதில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளில் பயன்படுத்திய மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டும்,இதற்க்காக பிரத்யோகமாக தயார் செய்த முளைப்பாறியையும் ஆற்றில் விட்டு தங்களது நன்றியை தெரிவித்தனர். 
 
புதுமண தம்பதியர்கள் தங்களுடைய தாலிக் கயிற்றை இறுக்கி கட்டிகொண்டனர் இதனால் கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்  என்பது ஐதீகம் கரூர் மாவட்டம் மாயனூர் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் இந்த காவிரி ஆற்றில் இந்த ஆண்டு இந்த ஆண்டு நாமக்கல்  மாவட்ட பகுதியில் தண்ணீர் தண்ணீர் சென்றதால் கரூர் மாவட்டத்தின் அந்த மக்கள் நீண்ட தூரம் ஆற்று மணலில் நடந்து அக்கரைக்குச் சென்று முளைப்பாரியை விட்டனர் மேலும் காவிரி ஆற்றுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆற்றங் கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு  செல்லாண்டி அம்மனை வணங்கி தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தி அம்மன் அருளை பெற்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் அருகே சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதரை பொதுமக்கள் வழிபாடு!