Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமனின் தந்தை தசரத மன்னன் !

Advertiesment
ராமனின் தந்தை  தசரத மன்னன் !
, வியாழன், 30 ஏப்ரல் 2020 (22:39 IST)
இந்து சமயத்தில் இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம்  மக்களின் உணர்வுடன் கலந்துவிட்டது. இதில், ராமாயணம் அனைத்து மக்களாலும் போற்றப்படுகிறது. மகாகவி வால்மீகி  எழுதிய ராமாயணம் இன்றும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் , சமய சொற்பொழிவுகளிலும்,  மேடைகளில் நாடகமாகவும், தொலைக்காட்சியில் சீரியலாகவும் மக்களுக்கு பல அறிவுக்கருத்துகளைத் தாங்கி வந்துகொண்டுள்ளது.

இதில் நாம் இன்று பார்க்கப்போவது தசரத மன்னன். 

சூரிய குலத்தைச் சேர்ந்த கோசல நாட்டு மன்னர் தசரதன். பத்து தேர்களை இவர் ஒற்றை ஆளாய் இயக்குவதில் வல்லவர் என்பதால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும் கதைகள் உலவுகிறது. இவருக்கும்  கோசலைக்கும் முதலில் பிறந்தவள்தான் சாந்தா என்ற பெண். இவளை அங்க நாட்டு மன்னருக்கு சுவீகரம் கொடுத்து விட்டார் மன்னர் தசரதன்.

அதன் சாந்தாவின் கணவரும் முனிவருமான, ரிஷ்ய சிருங்கர் முனிவரின் வேள்வி மூலமாக தசரத மன்னருக்கு கோசலை, சுமித்ரை மற்றும் கைகேயில் ஆகிய மூன்று மனைவியர் மூலமாக ராமன், லட்சுமன் ,இலக்குவன், மற்றும் சத்ருக்கன் எனும் நான்கு குழந்தைகள் பிறந்தனர்.
webdunia

இதில், முன்பு ஒருமுறை போரின்போது, தேர் ஓட்டுவதில் வல்லவரான கைகேயில், தசரதரைக் காப்பற்றியன் பொருட்டும், அவருக்கு தசரதன் வரம் கொடுத்ததாகவும், அந்த வரத்தைத்தான் தனது மகன் பரதன் நாடாள, வேண்டும் என்பதற்காக, மந்தரை எனும் கூனியின் யோசனையைக் கேட்டு, தசரதனிடம்  ராஜ்ஜியத்தில் மூத்த மகனாகவும், அடுத்த பட்டாபிஷேகம் செய்யவிருக்கும்  ராமன்   14 ஆண்டுகள் வனவாசம் செல்ல  வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதைக்கேட்டு,  ராமன் புன்னகைபூத்து தன் மனைவி சீதா ,சுமித்திரையின் மகன் லட்சுமணன் ஆகியோருடன் மரவுரி தரிந்து 14 ஆண்டுகள் வனவாசம் செல்வதாகக் கூறி மகிழ்ச்சியுடன் செல்கிறான்.

சில நாட்களில் தசரதன் தான் செய்த தவற்றிற்காக மனவருந்தி உயிரிழக்கிறார்.  தன் அன்னை செய்த தவற்றிற்காக ராமனிடம் மன்னிப்பு கோருகிறான் பரதன். ஆனால், அன்னை கூற தந்தையிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதாகக் கூறி வனத்துக்குள் விழைகிறான் ராமன், அவனுடைய பாதணியை வாங்கி வந்து சிம்மாசனத்தில் வைத்து அண்ணனின் வருகைக்காகவே பாசத்துடன் காத்திருக்கிறான் பாசமுள்ள பரதன்.

தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் இருந்ததாகக் கதைகளும் உலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்