Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

மருத்துவர்களுக்கு கவச உடை வழங்க…நிதி திரட்டும் பிரபல நடிகை !

Advertiesment
Donate armor
, வியாழன், 30 ஏப்ரல் 2020 (20:38 IST)
பாலிவுட் நடிகை கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கவச உடைகள் வழங்க நிதி திரட்டி வருகிறார்.
 

இந்தியாவில் கொரொனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரொனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் மே 3ஆம் தேதிவரை நீட்டிப்பட்டுள்ள நிலையில்,  மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழில்நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் , கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கவச உடைகள் முக்கியம் ஆததால், இப்போது உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்3500 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,  மருத்துவர்களுக்கும், மருத்து ஊழியர்களுகும் முழு உடல் பாதுகாப்பு அளிக்கும் கவசத்தை நன்கொடையாக அளித்து வருகிறேன். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கவச உடை வழங்குவதற்காக நிதி திரட்டி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!