Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்...!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (23:37 IST)
காயத்ரி என்பதற்கு யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்று அர்த்தம் என காஞ்சி மகாபெரியவர் விளக்கம் அளிக்கிறார். கானம் பண்ணுவது என்றால் அன்பு பக்தியுடன் உச்சரிப்பது என்பது பொருள்.
 
இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான் சித்த  சுத்த என்னும் மனத்தூய்மை உண்டாகும். ஆனால் காயத்ரியை ஜபித்தது முதல் சித்தசுத்தி உண்டாக தொடங்கி விடும். அனைத்து நலன்களையும் தரும் காயத்ரி என்னும் மந்திரசக்தி நம்முள் அணையாமல் விருத்தியாக அருள்புரிய வேண்டும். ஒருநாளும் காயத்ரி மந்திரத்தை மறக்காத வரத்தை வேண்டுவோம். இந்த  மந்திரத்திலுள்ள எழுத்துக்களும், அதற்குரிய தெய்வம் ஜபித்தால் பலன்கள் உண்டு.

இதை ஜெபிப்பவர்கள் அதிகமான பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.
 
இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களை செய்து விட்டு காயத்ரி மந்திரம்  ஜபித்தால் பலன் கிடையாது.
 
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
 
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யாத எந்த ஜபமும் ஆராதனையும் பயனற்றது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – மேஷம் | Pongal Special Astrology Prediction 2025

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (10.01.2025)!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை!

இந்த ராசிக்காரர்கள் வியாபார முயற்சிகள் பலன் தரும்! - இன்றைய ராசி பலன் (09.01.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments