Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுமையான தோற்றத்தை மாற்ற உதவும் உருளைக்கிழங்கு !!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (15:47 IST)
உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, சூரிய ஒளியால் சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கிறது. இதில் உள்ள 'கேடகோலேஸ்' என்ற நொதி சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்குகிறது.


சரும பராமரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியால் கருமை அடையும் சருமத்தை பளிச்சென மாற்றுவதற்கும், முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றுவதற்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, சூரிய ஒளியால் சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கிறது. இதில் உள்ள 'கேடகோலேஸ்' என்ற நொதி கரும்புள்ளிகளை நீக்குகிறது.

உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்திப் பஞ்சு அல்லது துணியை அந்த சாற்றில் நனைத்து, முகம் முழுவதும் தடவவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவாகும்.

உருளைக்கிழங்கைக் கொண்டு பேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவதால் சருமம் பளிச்சிடுவது மட்டுமில்லாமல், அதில் இருக்கும் ஆன்டிஆக்சி டண்டுகள் முகத்தில் முதுமையான தோற்றத்தை மாற்றி, இளமைப் பொலிவைத் தருகின்றன.

பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்கள் நீங்கி மிருதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments