Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான தேங்காய் பால் சாதம் செய்ய !!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (15:00 IST)
தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
வெள்ளை பூண்டு - 20 பல்
பச்சை மிளகாய் - 7
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் பால்  - 3 கப்

தாளிக்க தேவையான பொருட்கள்:

பட்டை, லவங்கம் - தேவையான அளவு
கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
அன்னாசி பூ, கல் பாசி - தேவையான அளவு



செய்முறை:

ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து ந+ன்றாக வதக்கவும்.

10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும். பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி  கிளறவும். குக்கரை மூடி 2 விசில் வரும் வரை காத்திருக்கவும். சூடான சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.

குறிப்பு: இந்த சாதாம் செய்ய தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியும் சேர்த்து சமைக்கலாம். இதற்கு துணை உணவாக சிக்கன்  கிரேவி இருக்கும். குர்மா இதனுடன் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments