Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுநீரின் நிறத்தை வைத்தே நோயினை கண்டறியும் வழி....

Advertiesment
சிறுநீரின் நிறத்தை வைத்தே நோயினை கண்டறியும் வழி....
சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருளாகும். இது சிறுநீரகத்தில்  உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.
சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், யூரியா, குளோரைடு, சோடியம், கிரியேட்டினைன் ஆகிய வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் உணவு, பருவ நிலை மாற்றம், நம்முடைய உள்ளுறுப்புகளின் நிலை, தட்பவெப்பம் ஆகிய பல  காரணங்களால் நம்முடைய சிறுநீரின் நிறம் அவ்வப்போது வேறு வேறாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
 
சிலருக்கு பருவ மாற்றத்தால் சிறுநீரின் நிறம் மாறும். சிலருடைய உணவுப் பழக்கத்துக்கு ஏற்ற நிறம் மாறும். நிறம் மாறுவதற்கு இப்படி பல காரணங்கள்  இருக்கின்றன. இதன்படி, சிறுநீரின் நிறத்தைப் பார்த்தே, நமக்கு ஏற்பட்டுள்ள நோயினை கண்டறியலாம்.
 
நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தையும் நீர்ச்சத்தையும் அளக்கும் மீட்டராக நம்முடைய சிறுநீர் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அதோடு நம்முடைய உடலில் இருக்கும் பாதிப்பகள் குறித்து நம்மடைய சிறுநீரே வெளிக்காட்டிவிடும். சிறுநீர் சிவப்பு அல்லது பிங்க் ஆக வந்தால் சிறுநீரகக் கோளாறு  இருக்கிறதென்று அர்த்தம்.
 
சிறுநீர் வெண்மையாக இருந்தால், அதிக உப்புச் சத்து வெளியேறுகிறது என அர்த்தம். இதனால், உடலின் செயல்பாட்டில் சிரமம் ஏற்படும். பழுப்பு நிறம் கல்லீரல்  குறைபாட்டையும் நீலம் அல்லது பச்சை நிறம் அதிக மருந்துகள் உட்கொண்டதன் விளைவு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறுத்தில் இருந்தால், உடல் போதிய அளவு நீருடன் நலமாக உள்ளோம் என்று அர்த்தம். இதுவே சிறுநீர் மற்ற நிறங்கள் கலந்து, நுரையுடன் வெளியேறும்பட்சத்தில் மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறலாம். எல்லாவற்றிலும் முக்கியமாக, சிறுநீரை அடக்கக்கூடாது. அதனால், உடலில்  நச்சு சேர்ந்து, நோய் ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதில் ஜீரணம் தரும் புதினா சூப்...!