Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எளிதில் ஜீரணம் தரும் புதினா சூப்...!

எளிதில் ஜீரணம் தரும் புதினா சூப்...!
புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
புதினா சூப் செய்ய:
 
புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.  அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து  கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு,  குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகள் எல்லாம் விலகும். சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும்.
 
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது. புதினாவை சட்னி, ஜூஸ் என எந்த  விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.
 
புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும்.  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ குணம் நிறைந்த கொள்ளு எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா?