Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை அறியும் வழிமுறைகள்...

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (16:22 IST)
பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய, பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம்  கண்டுபிடித்துவிடலாம். பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம்.

 
பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால், இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து  கொள்ளலாம். 
 
வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்கும். ஆனால் மாவு  கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடும். 
 
பாலில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதை கண்டறிய ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால்  நுரை வரும். வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும். ஆனால், சோப்புத் தூள் கலந்த  பாலாக இருப்பின் அந்த நுரை போகாது. 
 
சுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால்,  கலப்பட பால் திரியாது.  
 
பாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாம். ஒரு சிறிய டம்ளரில்  பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காகிதம் பச்சை நிறமாக மாறினால் அது நல்ல பால். அதுவே, மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் என்பதை உறுதி செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments