Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலே இந்த பொருட்கள் இருக்க.. பியூட்டி பார்லர் எதற்கு...?

Webdunia
தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.
* கேரட்டை அரைத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்தவுடன், முகத்தை கழுவவும். முகம் பளிச் என்று  இருக்கும்.
 
* பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம்  கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
 
* உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து  முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ, முகம் பொலிவுடன் மிளிரும்.
 
* பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
 
* செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும்.  கூந்தல் அடர்த்தியாக வளரும்.
 
* முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு  மாறும்.
 
* உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

அடுத்த கட்டுரையில்
Show comments