Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலையன்ஸ் ஜியோ மட்டும் IUC கட்டணம் செலுத்துவது ஏன்??

ரிலையன்ஸ் ஜியோ மட்டும் IUC கட்டணம் செலுத்துவது ஏன்??
, செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:52 IST)
ரிலையன்ஸ் ஜியோ மட்டும் IUC கட்டணம் செலுத்துவது ஏன் என தகவல் வெளியாகியுள்ளது. 


2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவிற்கு தாவினர். இதனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன. 
 
அதன் பின்பு ஜியோவுக்கு நிகரான திட்டங்களை அமல்படுத்தி, தனது வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தியது. இந்நிலையில் நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறி வந்த ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தின.
webdunia
இதனைத்தொடர்ந்து ஜியோவும் கட்டணத்தை உயர்த்தியதோடு, மற்ற நிறுவன எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ளும் போது 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது  IUC கட்டணம் என கூறப்படுகிறது. 
 
IUC கட்டணம் ஒரு ஆபரேட்டரால் மற்றொரு ஆபரேட்டருக்கு அழைப்பை நிகழ்த்துவதற்காக செலுத்தப்படும் கட்டணமாகும். ஜியோ இலவசமாக வழங்கப்படுவதால் ஜியோ நெட்வொர்க்கில் இருந்து வெளிச்செல்லும் அழைப்புகள் நிறைய நடக்கத் தொடங்கின. 
 
ஆகவே, ஜியோ கட்ட வேண்டிய IUC கட்டணம் அதிகரித்தது. இதனை சமாளிக்கவே ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன்றுக்கு மேல் வீடுகள் வாங்கினால் கட்டுப்பாடு ? உயர் நீதிமன்றம் கேள்வி !