இந்தியா ஸ்மார்ட் மொபைல் சந்தை மற்றும் செல்போன் சந்தையில் வர்த்தகம் மேற்கொண்டு குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக உயர்ந்த ரியல்மி, தனது புதுப்புது தயாரிப்புகளின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக, அதன் தயாரிப்பில் பிட்னஸ் பேண்டை அறிமுகம் செய்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து, ஜியோமி நிறுவனத்தின் பிட்னஸ் பேண்டுக்கு போட்டியாக ரியல்மி நிறுவனம் பிட்னஸ் பேண்டை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பிட்னஸ் பேண்ட் வரும் பிப்ரவரி மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
இதுகுறித்து ரியல்மி நிறுவனத்தின் சிஇஓ மாதவ் தெரிவித்துள்ளதாவது:
ரியல்மி ஃபிட்னஸ் பேண்டுக்கு அடுத்து, ரியல்மி X50 ஸ்மார்ட் போன் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார்.