Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்: ஸ்டேட் பாங்க் அதிரடி ஆஃபர்!!

Advertiesment
குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்: ஸ்டேட் பாங்க் அதிரடி ஆஃபர்!!
, வியாழன், 3 நவம்பர் 2016 (10:02 IST)
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது முக்கிய வர்த்தகச் சேவையான வீட்டுக் கடனில், வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. 


 
 
கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி அனைத்துக் கடன் திட்டத்திலும் 0.15% அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைத்த நிலையில் வீட்டுக்கடன் திட்டத்தின் வட்டி விகிதம் 6 வருட சரிவை எட்டியுள்ளது. 
 
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள சலுகை திட்டத்தில் பெண்களுக்களுக்கான வீட்டுக் கடனுக்கு 9.10 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. பிற அனைவருக்கும் 9.15 சதவீத வட்டியுடன் வீட்டுக் கடன் வழங்கப்படிகிறது.
 
இந்தச் சலுகை திட்டம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டுமே எனவும் அறிவித்துள்ளது.
 
இத்திட்டத்தின் மூலம் ஸ்டேட் பாங்க் ஆஃப் வீட்டுக் கடனில் சில சதவீதம் வட்டி விகிதம் குறைந்ததுடன் செயற்பாட்டுக் கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்துள்ளது. 
 
வீட்டுக் கடன் திட்டத்தில் தற்போது குறைத்துள்ள வட்டி விகிதத்தின் மூலம் 50 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதம் ஈஎம்ஐ 542 ரூபாய் அளவுக்கு குறையும். 
 
வங்கி சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎம்சி ஆகியவற்றை ஒப்பிடுகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் சுமார் 0.20 சதவீதம் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவார் - கருத்துக் கணிப்பில் தகவல்