Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவார் - கருத்துக் கணிப்பில் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவார் - கருத்துக் கணிப்பில் தகவல்

Advertiesment
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவார் - கருத்துக் கணிப்பில் தகவல்
, வியாழன், 3 நவம்பர் 2016 (09:36 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனே வெல்வார் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.


 

 
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வருகிற 8ம் தேதி அங்கு நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும்(68), குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும்(68) களத்தில் உள்ளனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 
அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை, வாக்குப்பதிவு நடக்கும் நாள் வரை காத்திருக்க தேவையில்லை. அதற்கு முன்பாகவே ஓட்டு போட சிறப்பு வசதி செய்து தரப்படுகிறது.
 
அந்த வகையில், இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் முன் கூட்டியே வாக்களித்து விட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  முக்கிய மாகாணமான புளோரிடாவில் மட்டும் 40 லட்சம் பேர் வாக்களித்து விட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இந்த தேர்தலில் ஹிலாரியே வெற்றி பெறுவார் என அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற வர்த்தக, நிதி சேவை நிறுவனமான மூடிஸ் கார்ப்பரேஷனின் அங்கமான ‘மூடிஸ் அனாலிடிக்ஸ்’ கணித்துள்ளது.
 
இந்த தேர்தலில் எலக்டோரல் கல்லூரி ஓட்டுகளை பொறுத்தவரையில் ஹிலாரிக்கு 332 ஓட்டுகளும், டிரம்புக்கு 206 ஓட்டுகளும் கிடைக்கும் என அந்த அமைப்பு கணித்துள்ளது. அதேபோல், மற்ற சில கருத்துக் கணிப்புகளும் ஹிலாரியே அதிக ஓட்டுகளைப் பெறுவார் என கணித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் அறிவிப்பு