Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (13:15 IST)
சாம்சங் நிறுவனம் தனது பொருட்கள் மீது விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. புளூ ஃபெஸ்ட் சேல் என்ற பெயரில் இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளது. 
 
சாம்சங்கின் இந்த புளூ ஃபெஸ்ட் சேல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.  இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
கேலக்ஸி நோட் 9  ஸ்மார்ட்போன் ரூ. 42,999 விலையிலும், கேலக்ஸி எஸ்9 ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது
 
சாம்சங் வயர்லெஸ் சார்ஜர், கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், ஸ்டிராப் காம்போக்கள், ஏ.கே.ஜி. வை500 ஹெட்செட், கேலக்ஸி ஃபிரெண்ட்ஸ் கவர், க்ளியர் வியூ கவர் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ மீதும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 
 
ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 7.5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments