வங்கிகள் திவாலானால் 5 லட்சம் கிடைக்குமா?! – நிதியமைச்சரின் புதிய ஐடியா!

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (13:12 IST)
வங்கிகள் திவாலானால் பணம் பெற்றுகொள்ள டெபாசிட் காப்பீட்டை உயர்த்த நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

தற்போது வங்கிகளில் டெபாசிட் காப்பீடு உச்ச வரம்பு 1 லட்சமாக இருக்கிறது. அதாவது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி திடீரென திவாலானால் நீங்கள் எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலும் ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும். ஒரு லட்சத்திற்கு குறைவாக டெபாசிட் செய்பவர்களுக்கு அந்த தொகைதான் திரும்ப கிடைக்கும்.

சமீபத்தில் பஞ்சாப், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற கடன் மோசடிகளை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் டெபாசிட் தொகையை எடுக்க முடியாமல் போனது.

இந்நிலையில் டெபாசிட் காப்பீட்டை 1 லட்சத்திலிருந்து உயர்த்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார். வரி விகிதங்கள், வருமான வரி போன்றவற்றில் மாற்றம் செய்ததை கருத்தில் கொண்டு 5 லட்சம் வரை அதிகபட்ச டெபாசிட் காப்பீடாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கான புதிய சட்டம் மத்திய அமைச்சரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments