Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாதங்களுக்கு இலவச டேட்டா: பழைய ரூட்டை பிடிக்கும் ஜியோ!!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (10:16 IST)
சுதந்திர தின சலுகையாக ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 5 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்க உள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,999 மதிப்புள்ள ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் மூலம் ஐந்து மாதங்கள் வரை இலவச தரவு மற்றும் ஜியோ-டு-ஜியோ அழைப்புகளை வழங்குகிறது. இந்த சலுகையைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் முதலில் ஜியோஃபை திட்டம் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
 
ஜியோஃபை ரீசார்ஜ் - ரூ.199: 
ரூ. 199-க்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு, வரம்பற்ற ஜியோ - ஜியோ அழைப்புகள், 1000 ஜியோ மற்ற மொபைல் நெட்வொர்க் நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படுகிறது. 
 
ஜியோஃபை ரீசார்ஜ் - ரூ.249: 
28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ அழைப்புகள், 1000 ஜியோ மற்ற மொபைல் நெட்வொர்க் நிமிடங்களுக்கு அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படுகிறது. 
 
ஜியோஃபை ரீசார்ஜ் - ரூ.349: 
ரூ. 349-க்கு 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ - ஜியோ அழைப்புகள், 1,000 நிமிட ஜியோ மற்ற மொபைல் நெட்வொர்க் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments