Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.99 செலுத்தி ‘ JIO போன் 2’ ...மாதம் ரூ.141 இ.எம்.ஐ ! ரிலையன்ஸ் அசத்தல் ஆஃபர் !

Advertiesment
ரூ.99 செலுத்தி ‘ JIO போன் 2’ ...மாதம் ரூ.141  இ.எம்.ஐ ! ரிலையன்ஸ்  அசத்தல் ஆஃபர் !
, வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (21:00 IST)
இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோஒ போன் – என்ற செல்போனை மாதத் தவணை ரூ. 141 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என சலுகை விலையில் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவிக்கும். இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு,  ஜியோ போன் 2 என்ற செல்போனை ரூ. 99 செலுத்தி 3 லிருந்து 5 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து,மாதம் ரூ. 141 மட்டும் தவணையாக செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. மேலும் கிரடிக் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த் ஆஃபர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ஜியோனா போன் 2 –வுடன் ஜியோ சிம் ஒன்றும் ரூ. 99 செலுத்திப் பெறலாம் என தெரிவித்துள்ளது. இந்த சிம்மில் 14 ஜிபி டேட்டா மற்றும் இலவச போன அழைப்புகளை 28 நாட்களுக்குள் பெறமுடியும் எனவும் அத்துடன் 300 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜியோ போன் 2 , 2.4 இன்ச் திரை கொண்டது. ஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும்.  வாட்ஸ் ஆப், யூடியூப் ஃபேஸ்புக் என அனைத்தும் பயன்படுத்தலாம் 4 ஜி இண்டெர்னல் மெமரியும், 2000 எமே எச் பேட்டரி திறனும்  கொண்டது. மேலும் இந்த போனில் 24 மொழிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதன் விலை ரூ. 2999 என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை! விஜயகாந்த்