Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் வரை நீளும் ஜியோ ரீசார்ஜ் கேஷ்பேக் ஆஃபர்: பயனர்கள் குஷி!!

Advertiesment
டிசம்பர் வரை நீளும் ஜியோ ரீசார்ஜ் கேஷ்பேக் ஆஃபர்: பயனர்கள் குஷி!!
, செவ்வாய், 28 நவம்பர் 2017 (14:10 IST)
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் 100 சதவிகித கேஷ்பேக் வழங்கியது. அதனை தொடர்ந்து மும்மடங்கு கேஷ்பேக் சேவையை வழங்கியது. தற்போது இந்த கேஷ்பேக் சலுகையின் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.  
 
ரிலையன்ஸ் ஜியோவின் மும்மடங்கு கேஷ்பேக் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.400 மதிப்பிலான வவுச்சர்களையும், ஆன்லைனல் தளங்களில் பயன்படுத்தக்கூடிய ரூ.1899 மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது. 
 
இந்த சலுகைப்நவம்பர் 25 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என கூறப்பட்ட நிலையில், இதனை டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 
 
ஜியோ கேஷ்பேக் முழு விவரம்: 
 
# ரூ.399 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ 400 (ரூ.50X8) கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
# அமேசான்பே, மொபிகுவிக், பேடிஎம் மற்றும் போன்பெ உள்ளிட்ட வாலெட் கொண்டு பணம் செலுத்தும் போது ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் ரூ.300 வரை கேஷ்பேக் பெற முடியும். 
# ஜியோ சிறப்பு வவுச்சர்கள் - AJIO, யாத்ரா.காம் மற்றும் ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்த வழங்கப்படுகிறது. 
# AJIO தளத்தில் குறைந்த பட்சம் ரூ.1,500க்கு பொருட்களை வாங்கும் போது ரூ.399 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
# யாத்ரா.காம் தளத்தில் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் ரவுண்டு டிரிப் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ரூ.1000 தள்ளுபடியும், ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
# ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் தளத்தில் ரூ.1,999 மற்றும் அதற்கும் அதிகமான தொகை செலுத்தி பொருட்களை வாங்கும் போது ரூ.500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுசூதனனை எதிர்த்து களமிறங்கும் கோகிலா இந்திரா! அதிமுகவில் பரபரப்பு