Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை இனி குறையும்.. மத்திய பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 23 ஜூலை 2024 (13:02 IST)
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து தங்கம் வெள்ளி விலை இனி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் அதன் பல முக்கிய அறிவிப்புகள் இருந்ததை பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீது விதிக்கப்படும் 15 சதவீத வரியை 6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளார். அதேபோல் பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%-ல் இருந்து 6 சதவிகிதம் ஆக குறைக்கப்படுகிறது. தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
 தங்கம் வெள்ளி மற்றும் பிளாட்டினத்தை அடுத்து வைரத்திற்கும் 6.4 சதவீதமாக இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தங்கம், வெள்ளி, பிராட்டினம், வைரம் ஆகியவற்றின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments