Publish Date: Fri, 19 Jul 2024 (11:29 IST)
Updated Date: Fri, 19 Jul 2024 (11:33 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ஒரு சவரன் 500க்கும் மேல் உயர்ந்த நிலையில் நேற்று இன்றும் படிப்படியாக மீண்டும் தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 6,875 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய் 55,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,345 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,200.00 எனவும் விற்பனையாகி வருகிறது