Publish Date: Mon, 22 Jul 2024 (11:34 IST)
Updated Date: Mon, 22 Jul 2024 (11:36 IST)
கடந்த ஒரு வாரமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து வந்த நிலையில் இன்றும் சரிந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,825 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 54,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,295 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது