Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் முடிவு!

3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் முடிவு!
, வியாழன், 2 நவம்பர் 2017 (15:08 IST)
இன்னும் சிறிது காலத்தில் தனது 3ஜி சேவைகளை நிறுத்தப்போவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

 
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஜியோ 4ஜி அறிமுகத்துக்கு பின் தனது வாடிக்கையாளர்களை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு வந்தது. ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல்லும் பல சலுகைகளை வழங்கி வந்தது.
 
ஜியோ தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளதை அடுத்து ஏர்டெலின் சந்தை மதிப்பு உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. வாய்ஸ் கால்களுக்கு 2ஜி சேவை பயன்படுவதால் அதன் வைத்துக்கொண்டு 3ஜி சேவையை மட்டும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
4ஜி சேவையை அதிகப்படுத்து எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜி மற்றும் 4ஜி ஆகிய சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கிறது. அதுவும் புதிய மாடல்கள் அனைத்தும் 4ஜி வசதி கொண்ட மொபைல்கள்தான் பெரும்பாலும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் ஒரு குறுகிய கால அரசியல் தலைவர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி