காலை 8 மணி - லியோனி சிரிப்பு பட்டிமன்றம்
இன்றைய தமிழ் கலாச்சாரம் பின்பற்ற படுகிறாதா, படவில்லையா என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனியின் தலைமயில் சிறப்பு சிரிப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
காலை 9 மணி - ஜெயம் ரவியின் பொங்கல்
நடிகர் ஜெயம் ரவி பொங்கல் பண்டிகையை 'முட்டுக்காடு' எனும் கிராமத்துக்கு சென்று மிகவும் வித்யாசமாக கொண்டாடுகிறார். இதன் தொகுப்பு ஜெயம் ரவியின் பொங்கலில் ஒளிப்பரப்பாகிறது.
காலை 10 மணி - லொள்ளு 200
எல்லொரையும் வயிரு குலுங்க சிரிக்க வைக்கும் 'லொள்ளு சபா' சகாக்கள் தங்களின் நிகழ்ச்சி 200 நாட்களை தொட்டுவிட்ட சந்தோஷத்தில் கலகலப்பான கொண்டாட்டங்களை மேற்கொள்கின்றனர். இது 'லொள்ளு 200' எனும் பெயரில் இடம் பெறுகிறது.
காலை 11 மணி - கதையின் நாயகன் சேரன்
இயக்குனர், நடிகரான சேரன் தான் நடித்த, இயக்கிய திரைப்படங்களில் வந்த ரீல் கதாபாத்திரங்களை ரியலாக சந்திக்கிறார்.
நன்பகல் 12 மணி - தனுஷின் யாரடி நீ மோகினி:
தனுசின் நடிப்பில், பிப்ரவரி மாதம் வெளியாகயிருக்கும் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இடம்பெறுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியாகும் இத்திரைப்படத்தின் பாடல்களும் இடம்பெறும்.
மதியம் 2 மணி - ஆச்சி ஜோடி No.1 LIVE:
சீசன் 1 மற்றும் சீசன் 2 ஜோடிகள் இணைந்து கலக்கிய நடன நிகழ்ச்சியான ஆச்சி ஜோடி No.1 LIVE ஒளிப்பரப்பாகிறது.