மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினமான நாளை முதல் தமிழகத்தில் மெகா டி.வி. தனது ஒளிபரப்பை துவங்கிறது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் அதன் தலைவர் சோனியா காந்தி, புதிதாக உதயமாகும் மெகா டிவியை துவக்கி வைத்தார். பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ஆகியோர் முன்னிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வீ.தங்கபாலு, சோனியா காந்தியிடம் மெகா டிவியின் துவக்க ஒளிநாடாவை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சோனியா காந்தி மகிழ்ச்சியுடன் மெகா டிவியை துவக்கி வைத்தார்.
இந்தியாவிலேயே, முதல் காங்கிரஸ் தொலைக்காட்சியாக வெளிவரும் மெகா டிவி பெரும் வளர்ச்சி கண்டு, வெற்றிகளைக் குவிக்க சோனியா காந்தி தங்கபாலுவிடம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த மெகா டிவியின் முழு ஒளிபரப்பு, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினமான நாளை (19ஆம் தேதி) காலை 6 மணிமுதல் ஆரம்பமாக உள்ளது.