மகளிருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பி அதற்கான தீர்வினைக் கூறும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.
கலைஞர் குழுமத்தின் செய்திகள் தொலைக்காட்சியில் மெல்லினம் என்ற மகளிருக்கான நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நேரடி ஒளிபரப்பில், மகளிர் சம்பந்தமான அனைத்து செய்திகளும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர், பிரச்சினை பற்றி மகளிருடன் விவாதித்து, அவர்களுடைய சந்தேகங்களுக்கு தீர்வு தருகிறார். இந்நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினை, வெளி இடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக மெல்லினம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.