மெகா டிவியில் தினமும் காலை 7.30 மணிக்கு திருமணமும், ஜாதகமும் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் அடிப்படை, ஜாதகப் பலன்கள் பற்றிய தெளிவான விளக்கத்தை இந்நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும் உரிய திருமண பொருத்தங்களை அலசி ஆராயும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
ஒவ்வொரு ராசிக்குரிய பலன்களும் இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்படுகின்றன. எந்தெந்த ராசிக்காரர்கள் மணவாழ்க்கையில் இணைந்தால் சிறப்பாக வாழலாம் என்பதை ஜோதிட அடிப்படையில் ஜோதிடர் ராமலிங்கம் விளக்குகிறார்.
சிலருக்கு திருமணம் தள்ளிப்போதல், தொடர்ந்து தடை எற்பட்டு வருதலுக்கு அதற்கான பரிகாரங்கள் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் அவர் தெளிவுபடுத்துகிறார்.