விஜய் டிவியில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது காதல் மீட்டர் நிகழ்ச்சி. தம்பதிகளுக்கு இடையிலான புரிந்துணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சி.
வாரந்தோறும் 2 நட்சத்திர ஜோடிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தையும், வீட்டைப் பற்றியும் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
2 ஜோடிகளில் அதிக மதிப்பெண் பெறும் ஜோடிகள் வெற்றியாளராக அறிவிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை பெரிய திரையின் முன்னாள் நாயகன் நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார்.
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் இந்நிகழ்ச்சியில் இதுவரை போஸ்வெங்கட்-சோனியா, நடிகர் பிரேம்-ஹம்சவர்தினி, பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தம்பதிகள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.