விரைவில் நடைபெற இருக்கும் யூனிவெர்செல் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக வரும் மே 10, 2009 ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு விருது பற்றிய பல முக்கிய தகவல்களை இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யூனிவெர்செல் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பில், இந்த ஆண்டின் தேர்வுக் குழு உறுப்பினர்களான - யூகி சேது, திரைப்பட விமர்சகர்/கார்டூனிஸ்ட் மதன், நடிகை லிசி ப்ரியதர்ஷன், பிரதாப் போத்தன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த புதுமுக நடிகர் / நடிகை, சிறந்த துணை நடிகர் / நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி பாடகர் / பாடகி என 27 பிரிவுகளின் கீழ் விருதுகள் இந்த வருடம் உண்டு.
இவற்றில் சிறந்தவற்றை இந்த ஆண்டின் நடுவர்கள் தேர்வு செய்வர் என்பது குறிப்பிடதக்கது.
முதலில் 2008 ஆம் ஆண்டு வெளியான 118 திரைப்படங்களைப் பற்றி இவர்கள் ஆய்வு செய்வர்; கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வரலாற்றில் 118 திரைப்படங்கள் வெளியானது 2008ல் தான் என்பதைப் பற்றி நடுவர்கள் பேசுகின்றனர்.
திரைப்படங்களில் துணை நடிகர்களுக்கு கூடி வரும் முக்கியத்துவத்தைப் பற்றியும், இவர்களின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருப்பது பற்றியும். எப்போதும் இல்லாமல், சென்ற ஆண்டில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அல்லாது கதாநாயகிகளுக்கு அதிகளவு முக்கியத்தும் அளித்து பல திரைப்படங்கள் வெளியானதைப் பற்றியும் பேசுகின்றனர்.
2008 தமிழ் சினிமா பற்றிய எல்லா செய்திகளையும் வரும் மே 10, 2009 ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு நடுவர்களுடன் துவங்கும் இந்த யூனிவெர்செல் விஜய் விருதுகள் நிகழ்ச்சியை விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்!